Monday, 25 March 2013

அப்படி என்னதாண்டா பேசுவீங்க ?


அப்படி என்னதாண்டா பேசுவீங்க ?


நம்மில் நூற்றுக்கு 78 பேருக்கு என்னைப் போலவே பழமையைப் போற்றுவோம் பாலிசி  இருக்கும்னு நெனைக்கிறேன். ஆட அதுதாங்க. சின்னப்புள்ளையில போட்ட சட்டை , ஆக்கர் குத்தின பம்பரம் , உடைஞ்சுபோன ஸ்க்ரூ டிரைவரு தொடங்கி, இயக்கவே முடியாத வீடியோ டேப் ரிகார்டர் , இன்னும் எத்தனையோ சரக்குகளைத் தூக்கி எறியாமல் ஒரு மூலையில் குமிச்சு வச்சிருப்போம்.என்னைக்காவது நம் வீட்டின் உள்துறை அமைச்சரின் ஓங்கிய குரலுக்கு பயந்து / பணிந்து அவைகளை மறுபடியும் அலசும் போது அபூர்வமா ஒன்னு ரெண்டு கெடைக்கும். அது போன்றும் இன்று எனது பழைய இ-மெயில்களை குடைந்த போது கிடைத்த ஒரு அட்டாச்மெண்ட். இதற்கு சொந்தக்காரன் நானல்ல. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

லோக்கல்ல தென்னை மட்டை வச்சு ஆடறவங்களா இருந்தாலும், சர்வேதச லெவல்ல ஆடறவங்களா இருந்தாலும், ஒவ்வொரு ஓவர் முடிஞ்சதும், நடந்து வந்து பேட்டை தட்டிகிட்டு எதாவது பேசறது வழக்கம். இது சம்பந்தமா மெயில்ல வந்த ஒரு ஜோக்கையும், நடந்து முடிந்த இந்தியா-இலங்கை போட்டியையும் கலந்த ஒரு கற்பைன :)

இலங்கை 254 ரன் அடிச்சு இந்தியா 255 ரன் அடிச்சா வெற்றிங்கற நிலமைல உத்தப்பாவும், கங்கூலியும் ஆட வர்றாங்க. முதல் ஓவர் சமிந்தா வாஸ் போடறாரு. உத்தப்பா தடவு தவுனு தடவி ரன் எதுவும் எடுக்காம ஆறு பந்தையும் ஆடி முடிச்சுடறாரு.

கங்கூலி : ஏண்டா, ஃபோரு சிக்ஸுனு அடீப்பனு பார்த்தா இப்படி தடவிட்டு வந்து
சிரிக்கேறேய. உனக்கு உத்தப்பானு பேர் வச்சதுக்கு சொத்தப்பானு பேர் வச்சிருக்கலாம்.

உத்தப்பா : பேசாத நீயி.அவன் ஓடி வர்றது தான் தெரியுது. பந்து எங்கே விழுந்து எங்கே போகுதுன்னே தெரியைல.நானே சின்னதம்பி கவுண்டமணி மாதிரி ஒருவழியா தடவி அவுட்டாகாம நிக்கேறன். அடுத்து அந்த பஞ்சுமிட்டாய் தலையன் மலிங்கா போடுவான். நீ என்ன பண்ரனு பார்க்கலாம்.

கங்கூலி : இந்த பெங்காலிக்கு அந்த ரங்கோலி மண்டையன் எல்லாம் தூசுடா. பாரு இப்ப என் ஆட்டத்த.
அடுத்த ஓவர் கங்கூலி வழக்கம் போல பந்துக்கு ஒத்தடம் குடுத்து ஆடிட்டு வரார்.

உத்தப்பா: (நக்கலான சிரிப்போட :) ) என்னேமா நாலு பால்ல ஆறு சிக்ஸ் அடிக்கபோற மாதிரி பேசுனே மாங்கா மண்டையா. ஏண்டா அடிக்கல?
கங்கூலி : ஹி.ஹி அடிக்கலாம்னு தான் பார்த்தேன். எப்படியும் நீங்க எல்லாம் சீக்கிரம் அவுட்டாயி போகப்போறீங்க. நான் ஒரு 100 பால்ல 40 ரன் அடிச்சா அடுத்த கேப்டன் ஆயிடுவேன்ல. அதான். இது நமக்குள்ளேய இருக்கட்டும். நான் கேப்டன் ஆனா உன்னை வைஸ் கேப்டன் ஆக்கிடுறேன்.

உத்தப்பா : (மனசுக்குள்ள "போகாத ஊருக்கு வழி சொல்லுது பாரு பொறம்போக்கு. இது மறுபடியும் கேப்டனாயி நான் வைஸ் கேப்டன் ஆகறதுக்குள்ள எனக்கு சங்கூதிடுவாங்க" ). ஆகா நல்லா திட்டம் போடுறீங்க. கலக்கிடலாம்.
கொஞ்ச நேரத்துல உத்தப்பா உலகக்கோப்பையில தனது அதிகபட்ச ஸ்கோரான 18 ரன்ன அடிச்சு அவுட்டாயி போறாரு. இப்போ ஷேவாக்கும் கங்கூலியும் ஆடறாங்க. கங்கூலி : என்ன ஷேவாக், இன்னைக்கு எவ்வளவு அடிக்கறதா உத்தேசம்?

ஷேவாக்: நிச்சயமா இன்னைக்கும் செஞ்சுரி அடிச்சிடாலம்னு தோனுது.

கங்கூலி : இவனுங்கைள என்ன அந்த பெர்முடா தலையனுங்கனு நினனச்சியா 114 அடிக்கறதுக்கு. நேத்து அடிச்சைத விட ஒரு ரன் கம்மியா அடிப்பனு தோனுது.

ஷேவாக் : என்ன 113?

கங்கூலி : இல்லை 14.
10 ஓவர்ல இந்தியா 42 ரன் அடிச்சிருக்கு 
கங்கூலி : இந்த ரெண்டு பன்னாடைங்களும் போடறைத பார்த்தா அடிக்க முடியும்னு தோனைல. பேசாம இன்னும் 6 ஓவருக்கு டொக்கு வச்சிட்டு ஸ்பின்னர்ஸ் வந்தான அடிக்கலாம்.

ஷேவாக் : போன ஓவர் வாஸ் போடும்போது கொஞ்சம் சோர்வா இருந்தான். அதனால் இந்த ஓவர்ல நீ அடிச்சு ஆடு, நான் அடுத்த ஓவைர பார்த்துக்கேறன். (மனசுக்குள்ளே "எப்படியும் இந்த நாயி அடிச்சு ஆடேறன்னு அவுட்டாயி போயிடும். அடுத்த கேப்டன் நாந்தான்" )

அவர் எதிர்பார்த்த மாதிரியே கங்கூலி அடிச்சு ஆட ட்ரை பண்ணி அவுட்டாயிடறாரு. ஸ்கோர் போர்டுல இருந்து கங்கூலி பேர எடுத்துட்டு சச்சின் பேர போடறதுக்குள்ள அவரும் அவுட்டாயி திரும்பராரு. அப்போ எதிர்ல உள்ள வர்ர திராவிட்,

திராவிட் : ஏய் மூதேவி, அதான் ரெண்டு பால தொடாம விட்டில்ல. இந்த பாலயும் விடேவண்டியது தான?

சச்சின் : நானும் அப்படித்தான் நினைச்சேன். மூனாவது பால் ஆடுறப்ப பூஸ்ட் விளம்பரம் ஞாபகம் வந்துடுச்சு. அதுல ஆடர மாதிரி நினைச்சுகிட்டு பாலை தொட்டேன். அவுட்டாயிடுச்சு.அடுத்த மேட்சுல அடிக்கேறன்.

திராவிட் : அடுத்த மேட்ச் உன் பையனோட உங்க வீட்டு கிரவுண்ட்ல தான் ஆடப்போற. உன்னையெல்லாம் தலயில கட்டி என் கழுத்த அறுக்கறாங்க. அப்படி என்ன அவசரம் உனக்கு?

சச்சின் : பின்ன. போன மேட்சுல கொஞ்ச நேரம் நின்னு ஆடிட்டு போறதுக்குள்ள, ஃப்ரிட்ஜ்ல இருந்த பீரையெல்லாம் காலி பண்ணிடுச்சுங்க பரேதசிங்க. அதான் அவசரமா போறேன். ரெண்டு பீராவது தேத்தனும்ல.

திராவிட் ; ஓ இதுல இப்படி ஒன்னு இருக்கா. நீ சொல்றதும் சரிதான். அப்படியே எனக்கு ரெண்டு எடுத்து ஒளிச்சு வை.

திராவிடும், ஷேவாக்கும் எதிர்பார்த்தைத விட ெகாஞ்ச நேரம் தாக்கு பிடிச்சு ஆடறாங்க.ஸ்கோர் 20 ஓவர்ல 89 ரன். திராவிட் : ஆமா போன உலகக்கோப்பைல சிக்ஸா அடிச்ச,இப்ப என்ன ஆச்சு?

ஷேவாக்: அப்போ ஒவ்வொரு சிக்ஸ் அடிக்கரதுக்கு முன்னாலயும் எங்கம்மா ரிலையன்ஸ் ஃபோன்ல கூப்பிடுவாங்க. இந்த தடைவ அவங்க ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதான்.

திராவிட் : த்த்த்தூதூ. இதெல்லாம் ஒரு பொழப்பு?

ேஷவாக் : (மனசுக்குள்ள என்னை பார்த்து துப்பிட்டியா? இந்த ஓவர்ல அவுட்டாயி உன்னை என்ன பண்றேன் பாரு)

ஷேவாக் அவுட்டாகி போறாரு.

திராவிட் அவைர கூப்பிட்டு,

திராவிட் : ஏண்டா அவன் தான் ஸ்லிப்ல ஒருத்தன நிக்க வச்சிருக்கானே அப்புறம் ஏண்டா அவன்கிட்டேய தூக்கி குடுக்கேற.

ஷேவாக் : இல்லண்ேண ஸ்லிப்ல நின்னு தூங்கிகிட்டு இருக்கான் அந்த பன்னாடை. என்னை டைவர்ட் பண்ற மாதிரி கொட்டாவி வேற விடுறான். அதான் அவைன அலர்ட்டா ஆக்கறதுக்கு கேட்ச் குடுத்தேன்.

திராவிட் : எல்லாரும் சொல்லி வச்சு எனக்கு குழி பறிக்கறீங்களா? போங்கடா நானே பார்த்துக்கேறன். அடுத்து வர யுவராஜும் தேவையில்லாம ரன் அவுட்டாயி போறாரு.

அப்போ

திராவிட் : டேய்ய் ப்ரில்கிரீம் மண்டையா, அதான் பால் நேரா ஃபீல்டர் கிட்ட போகுதே அப்புறம் ஏண்டா ஓடி வந்து ரன் அவுட்டான?

யுவராஜ் : இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. நான் தான் ஓடிவந்தேன்ல நீயும் வரேவண்டியது தான்?உனக்கு சுவருன்னு பேரு வெச்சதுக்கு குட்டிச்சுவருன்னு பேர் வச்சிருக்கலாம்

திராவிட் : நீ ஓடி வந்தது எங்கேடா தெரியுது. மண்டைல பூசியிருக்கர க்ரீம்ல க்ளேர் அடிச்சு கண்ணே தெரிய மாட்டேங்குது.

அடுத்து வர நட்சத்திர ஆட்டக்காரர் டோணி முதல் பால்ல அவுட்டாகி போறாரு. மகா கடுப்பான திராவிட் அவைர கூப்பிட்டு,

 திராவிட் : டேய் சடையாண்டி, அவன் தான் ஸ்டம்புக்கு நேர பால போடறான்ல. கையில அவ்வளவு பெரிய பேட் வச்சிருக்கியே, அதால ஆடாம ஏண்டா கால குறுக்கால விட்ட?

ேடாணி : இல்லன்னே, பேட்ட வைக்கலாம்னு தான் குனிஞ்சேன். அதுக்குள்ள முடி முன்னால் விழுந்து கண்ண மறச்சிடுச்சு

திராவிட் : போடி மாவு, ஏற்கனேவ வீட்டு சுவத்த எல்லாம் இடிச்சுட்டானுங்க. இனி உனக்கு சங்கு தான். முடிய வெட்டு முடிய வெட்டுனு எவ்வளவு தடைவ சொன்பனேன் கேட்டியாடா முள்ளம்பன்றி தலயா.

டோணி : கவைலப் படாதீங்கண்ணே, அதான் அகர்கர் இருக்கான்ல.

திராவிட் : யாரு அவனா? முப்பது யார்ட் சர்கிளுக்கு வெளியே அடிச்சா சிக்ஸ் இல்லைடா, பவுண்டரிக்கு வெளியே அடிக்கனும்னு எவ்வளேவா தடைவ சொல்லிட்டேன். கேக்க மாட்டேங்கறான். அவன வெச்சு உருப்பட்டாப்ல தான்.

டோணி : அப்புறம் ஏன்னே அவைன டீம்ல சேர்த்தீங்க?

திராவிட் : நான் எங்கேடா சேர்த்ேதன். அந்த சச்சின் தான் அடம் பிடிக்கறான். ஒட்டைடக் குச்சிக்கு, துடப்பகட்டை ரெகமண்டேஷன்.

அடுத்து வரும் அகர்கர் அதிசயமாக தாக்கு பிடித்து ஆறு ரன்கள் அடிச்சிருக்கார்.

திராவிட் : டேய் அதான் ஆறு ரன் அடிச்சு கலக்கிட்டியே, அப்புறம் ஏண்டா இப்படி பொனம் மாதிரி மூஞ்சிய வச்சிருக்க?

அகர்கர் : உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. நானே விழுந்து புரண்டு ஒரு ஃபிகைர செட் பண்ணி வச்சிருந்த்தேன், அது இப்போ நம்ம முனாஃபோட சுத்துது.

திராவிட் : ஏண்டா, அந்த ஃபிகர் கிட்டேய கேக்க வேண்டியது தான?

அகர்கர் : கேட்டேனே. என்னை விட முனாஃப் நல்லா போடறானாம். நிறய விக்கெட் எடுக்கறானாம். அதான் என்னை கழட்டி விட்டுடுச்சு.

திராவிட் : நீயும் நல்லா போட்டு விக்கெட் எடுக்க வேண்டியது தான?

அகர்கர் : எண்ணன்னே என்ன பத்தி தெரிஞ்சு தான் பேசுறீங்களா? அதெல்லாம் நம்ம கையிலயா இருக்குது. என்னால முடிஞ்ச விஷ்யம்னா பண்ணலாம். விக்கெட் எடுக்கறெதல்லாம் நம்ம சக்திக்கு அப்பாற்பட்ட விஷயம்னே.

சிறிது நேரத்தில் அகர்கரும் அவுட்டாகிப் போக, திராவிட் தனியாளாக வீரத்துடன் போராடுகிறார் . மலிங்கா வீசும் ஓவரில் நான்கு பவுண்டரி அடிச்சுட்டு சங்கக்கராைவ ெபருைமயாக பார்க்கிறார்.

சங்கக்கரா ; அடிச்செதல்லாம் ஓசி ஃபோரு. இது பார்க்கறத பாரு. இதத்தான் அனையப்போற விளக்கு பிரகாசம எரியுதுன்னு சொல்லுவாங்க. அடுத்த ஓவர்ல இருக்குதுடி உனக்கு ஆப்பு.

வழக்கம் போல் சைக்கிள் ஸ்டாண்டாக அனைத்து ஆட்டக்காரர்களும் அவுட்டாக, முனாஃபும், ஹர்பஜனும் கடைசி விக்கெட்டுக்கு ஆடுகிறார்கள்.

சங்கக்கரா : ஏண்டா பன் தலயா, அதான் எல்லாரும் அவுட்டாயி போயிட்டாங்கள்ல, நீங்க மட்டும் எதுக்குடா துள்ளுறீங்க?

ஹர்பஜன் : எங்கைளெயல்லாம் யாரும் விளம்பறத்துல நடிக்க கூப்பிடறதில்லே. இப்படி எதாவது அடிச்சாலாவது கூப்பிடுவாங்கள்ல.அதான்.

சங்கக்கரா : நீங்க திருந்த மாட்டீங்களாடா? உங்களுக்காக சிகாகோல இருந்து சிறில்னு ஒருத்தர் ஃபேக்ஸ் அனுப்பியிருக்காரு.

ஹர்பஜன் : என்னவாம்?

சங்கக்கரா : போய் விவசாயத்ைத பாருங்கடா!னு ெசால்லியிருக்காரு.

ஹர்பஜன் : இது கூட நல்ல யோசைன தான். நாங்க விவசாயம் பண்ற அழக பார்த்துட்டு சுகுனா பம்ப், ஸ்பிக் யூரியானு எதாவது விளம்பரத்துல நடிக்க கூப்பிடுவாங்களா?

சங்கக்கரா மயங்கி விழுகிறார்!! போட்டி முடிந்தபின், சிவராமகிருஷ்ணன் திராவிடிடம் கேள்விகள் கேட்கிறார்.

சிவா: திராவிட், இன்னைக்கு தோத்தைத பத்தி என்ன சொல்ல விரும்பறீங்க?

திராவிட் : hmm..It's a disappointing day for us. Our bowlers didn't bowl well, batsmen didn't bat well and fielder's didn't field well.

சிவா: ஏண்டா, பவுலிங்கும் போடமாட்டிங்க, ரன்னும் அடிக்க மாட்டிங்க, விழுந்து ஃபீல்டிங்கும் பண்ண மாட்டிங்க! அப்புறம் என்ன ம......க்குடா கிளம்பி வந்தீங்க?

திராவிட் : ஹி.ஹி.. போன வருஷம் ஆட வந்தப்ப சில கரீபியன் தீவுகைள சுத்தி பார்க்க நேரமில்லாம போச்சு.அதுக்கு தான் சுத்தி பார்க்கலாம்னு கம்பைண்ட் ட்ரிப்பா இங்கே வந்தோம்.

சிவா : வந்தது தான் வந்தீங்க. 12 பேர் மட்டும் வந்திருக்கலாம்ல. எதுக்குடா சும்மா பெஞ்சுல உக்கார்ரதுக்கு பதான்,ஸ்ரீசாந்த், கார்த்திக் மூனு பேரயும் கூட்டிகிட்டு வந்தீங்க?

திராவிட் : ஆறு டிக்கெட் வாங்கினா ஒன்னு ஃப்ரீன்னு சொன்னாங்க. அதான் 12 டிக்ெகட்டுக்கு 2 டிக்கெட் ஃப்ரீயா கிடைக்குதேன்னு கூட்டிகிட்டு வந்தோம்.

சிவா : அப்படி பார்த்தாலும் ஒரு டிக்கெட் செலவு தானடா?

திராவிட் : அது ஒன்னும் பெரிய விஷயமில்லை. இந்தியாக்கு போன உடேன அஞ்சால் அலுப்பு மருந்து விளம்பரத்துல நடிச்சு அந்த காசை சம்பாதிச்சுடலாம்.

 சிவராமகிருஷ்ணனும் சுருண்டு விழுகிறார் ! !


--------------------------------------------------------------------------------------------------------------------------------