இது ஒரு நடைப்பயணம் . உப்பாற்று ஓடையோரம் கையில் புத்தகமும் , நெஞ்சில் கனவுகளும் சுமந்து அலைந்து திரிந்த அந்த அற்புத நாட்களின் ஞாபகமாய் இப்படி யொரு தலைப்பு.
எண்ணற்றோர் ஏற்கனவே ஏழு வருடங்களாய் ஓடிகொண்டிருக்கும் பாதையிலே நான் அடி எடுத்து வைக்கின்றேன். முன்னோர்கள் முனைவர்களாய் மாறி சாகசங்கள் புரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் நான் முதல் அடி எடுத்து வைக்கின்றேன். இது முதியோர் கல்வித் திட்டத்தில் பயிலும் ஐம்பது வயது மாணவன் (ர்) அகரம் எழுதிப்பார்க்கும் ஆசை.
இதை என்றோ துவங்க நினைத்து இந்த புத்தாண்டின் முதல் நாளில் முதல் பதிவை பதிக்கின்றேன்.
அம்மா , ஆடு எனத்துவங்கி திரிகோணமிதி , கால்குலஸ் வழியாய் , பாலிமர் , பறந்து செல்லும் ஏவுகணையின் எரிபொருள் வரை பயணித்து பின்னர் எண்ணெய் கடலிலே கலந்த என் வாழ்வின் ஆரம்பகாலம் உப்பாற்றங்கரையின் ஓரத்திலிருக்கும் குட்டி கிராமம். தெக்கூர் எனபெயரிட்ட தெருக்கள் குறைவாய் இருந்த அற்புத மண்ணிலே உதித்தேன். எழும் ஞாயிறுக்கு விழா எடுக்கும் நன்னாளாம் பொங்கல் திரு நாளிலே பிறந்தவனுக்கு சர்க்கரை நீர் ஊட்டி சங்கராந்திப் பொங்கலின் தாக்கத்தில் 'சங்கரலிங்கம்' எனப் பெயரிட்டனர் என் பெற்றோர்.
வாழுகின்ற நாட்களிலே B.Sc M.Sc , Ph.D வால் நீண்டு என் வாலுதனத்தை ஒடுக்கியது ,. வால் என்னமோ முழுமையாய் வெட்டப்பட்டது என் வாழ்க்கை துணை யாய் 'வளர் கரம் பற்றிய நாளில்.
தெக்கூரில் துவங்கி தமிழ்நாடு தாண்டி கர்நாடக , மகாராஷ்டிரா என உள்நாட்டிலே ஒப்பேற்றிவிட்டு ஐக்கிய அரபு தேசம் என்னும் அயல் நாட்டில் ஒதுங்கிய கதை என்னவோ மிகப் பெரியது. அதில் தான் எத்தனை சுவாரசியங்கள்.
இந்த வழிப் பயணத்திலே கண்ட காட்சிகள் , மீட்டிய ராகங்கள் இவற்றின் தாக்கங்களை வைத்து தகவல் பலகையாய் சுவை பட சொல்ல எடுத்த முயற்சி இது.பார்க்கலாம் எப்படிப் போகுமென்று.
அனனவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை சமர்ப்பித்து இதை நான் தொடங்குகிறேன்.
சங்கரலிங்கம்

2 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் "அங்கிள்" :) நல்லதோர் தொடக்கம். நல்வரவு!
பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது அத்தான். அடுத்த பதிவைக் காணாமே! எழுதுங்கள்
Post a Comment